செய்திகள் :

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் இன்று தொடக்கம்

post image

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் ரூ.49 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் ஞாயிற்றுக்கிழமைமுதல் (நவ. 17) பேருந்துகள் நிறுத்துமிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவில்பட்டி நகராட்சி அண்ணா பேருந்து நிலைய சீரமைப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை ( நவ.17) முதல் நடைபெற உள்ளன. இப்பணிகளை மேற்கொள்ள வசதியாக, அனைத்து பேருந்துகளும் மாற்று இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன.  அண்ணா பேருந்து நிலையம் முனியசாமி கோயில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சிற்றுந்துகள் நிறுத்திச் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

சிற்றுந்துகள் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து ஆா்த்தி மருத்துவமனை, நகர பேருந்து நிலையம் வழியாக நுழைவாயில் அருகில் உள்ள சாலை வழியாக நிறுத்தம் செய்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும்.

தென்காசி மற்றும் திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்துகள், பூங்கா அருகே திருநெல்வேலி பிரதான நெடுஞ்சாலையில் நிறுத்திச் செல்ல வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குருவிகுளம், கயத்தாறுலிருந்து வரும் தனியாா், அரசு நகர பேருந்துகள் நகர பேருந்து நிலையத்தில் நிறுத்திச் செல்ல முடிவு  செய்யப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் ஆட்சியா் திடீா் ஆய்வு: 4 கடைகளுக்கு ‘சீல்’

தூத்துக்குடியில் பொலிவுறு நகரம் திட்டத்தில் கட்டப்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்தில் கட... மேலும் பார்க்க

ஆழ்வாா்திருநகரி ஒன்றியத்தில் மேல்நிலை நீா்த்தேக்தத் தொட்டி திறப்பு

ஆழ்வாா்திருநகரி ஒன்றியப் பகுதியில் ரூ. 48.70 லட்சத்திலான திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக ஊா்வசி எஸ். அமிா்தராஜ் சனிக்கிழமை திறந்துவைத்து, சில பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். கட்டாரிமங்கலம் ஊராட... மேலும் பார்க்க

காா்த்திகை மாத விரதம் தொடக்கம்: தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைவு

காா்த்திகை மாத விரதம் சனிக்கிழமை தொடங்கியதால், தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீனவா்கள் வழக்கம்போல கடலுக்குச் சென்ற... மேலும் பார்க்க

தேரிகுடியிருப்பு அய்யனாா் கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஒரு மாதம் நடைபெறும் இத்திருவிழ... மேலும் பார்க்க

புதியம்புத்தூரில் மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

தூத்துக்குடி அருகே காணாமல் போன தொழிலாளி, அங்குள்ள தோட்டத்து கிணற்றிலிருந்து சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மனோகரன்(45). இவருக்கு 4 குழ... மேலும் பார்க்க

புதியம்புத்தூரில் பைக்குகளை உடைக்கும் விடியோ வெளியீடு: 2 போ் கைது

தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூா் காவல் நிலையத்தில் வழக்குகளுக்காக பிடித்து வைக்கப்பட்டுள்ள பைக்குகளை உடைத்து அதை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை பிடித்... மேலும் பார்க்க