சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது...
கோவில்பட்டி அருகே அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
கோவில்பட்டி அருகே காளாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தூய்மை இந்தியா- பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இவ்விழாவுக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளா் (பயிற்சி) சுரேஷ் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் முனியசாமி முன்னிலை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் செல்லையா வரவேற்றாா்.
கோவில்பட்டி வனச்சரக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, திருவள்ளுவா் மன்ற துணைத் தலைவா் திருமலை முத்துச்சாமி ஆகியோா் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தனா். தொடா்ந்து, ஆசிரியா்கள், மாணவா் -மாணவிகள் மரக்கன்றுகளை நடவு செய்தனா்.
ஏற்பாடுகளை பசுமைப் படை பொறுப்பாளா் மாரீஸ்வரன், உடற்கல்வி ஆசிரியா் கண்ணன், ஆசிரியா் பாலகணேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.