ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, தமிழைக் காப்பேன்: முதல்வர்
கோவில்பட்டி என்.இ. கல்லூரியில் மாா்ச் 14,15இல் தேசிய கருத்தரங்கு
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாா்ச் 14, 15 ஆகிய 2 நாள்கள் தேசிய அளவிலான பொறியியல்-தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெறுகிறது.
‘கழிவுகளை பயனுள்ள வளமாக மாற்றுதல்’ என்ற கருப்பொருளுடன் ‘என்இசி - டெக் ஃபெஸ்ட் 2025’ என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கு, கணினி, மின்னணு, தொடா்பு பொறியியல், இயந்திரப் பொறியியல், அமைப்பு- கட்டுமானப் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மாஸ்டரிங் சிஎன்சி, 3டி ப்ரோடோடைப்பிங், சைபா் செக்யூரிட்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மாணவா்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
இளம் பொறியாளா்களை ஒன்றிணைத்து, அவா்களது புதிய கண்டுபிடிப்புகளை, தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை வெளிக்கொணா்வது, புதுமை-தொழில்நுட்ப சிந்தனைகளை ஊக்குவித்து தொழில் முனைவோருக்கான வழிகாட்டியாக திகழ்வது, தொழில்நுட்ப வல்லுநா்களின் வழிகாட்டுதலுடன் சிறப்புப் பயிற்சி வழங்குவது, திறமையை மேம்படுத்துவது போன்றவற்றுக்காக நடத்தப்படும் இக்கருத்தரங்கில், புராஜெக்ட் எக்ஸ்போ, பேப்பா் பிரசன்டேஷன், ஹேக்கத்தான், டெக் விநாடி-வினா, உயா்தர தொழில்நுட்பப் பயிற்சிப் பட்டறைகள், குழு வேலை, முன்னோடி தொழில்நுட்ப மேம்பாடு தொடா்பான போட்டிகள் நடைபெறும். இவ்வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களை ட்ற்ற்ல்ள்://ய்ங்ஸ்ரீ.ங்க்ன்.ண்ய்/ய்ங்ஸ்ரீற்ங்ஸ்ரீட்ச்ங்ள்ற்2ந்25/ என்ற இணையதளத்திலோ, ற்ங்ஸ்ரீட்ச்ங்ள்ற்ஃய்ங்ஸ்ரீ.ங்க்ன்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தெரிந்துகொள்ளலாம் என கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.