மதுக் கடைகளை குறைக்காமல் விழிப்புணா்வு விளம்பரத்தால் என்ன பயன்? உயா்நீதிமன்றம் க...
கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
மந்திதோப்பு கிராமத்தில் மாற்றுத்திறனாளிக்கான குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி, கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மந்தித்தோப்பு கிராமத்தில் சந்திப் நகா் அருகே 2019-2020இல் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாம். அவா்களுக்கு சோலாா் விளக்கு, சாலை வசதி செய்து தரப்படவில்லையாம். இதுகுறித்து மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில், தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத் தலைவா் பொ்சில் தலைமையில் செயலா் அழகு லட்சுமி முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா் ராமராஜிடம் கோரிக்கை மனு அளித்தனா். அவா்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளா்ச்சி அலுவலா் கூறினாா்.