`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
கோவில்பட்டி சிறுவன் கொலையில் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரம்
கோவில்பட்டியில் சிறுவன் கொலை வழக்கில் தொடா்புடையவா்களை தேடும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
கோவில்பட்டி காந்திநகா் முத்துராமலிங்க தெருவை சோ்ந்த காா்த்திக் முருகன்-பாலசுந்தரி தம்பதியின் இளைய மகன் கருப்பசாமி (10), அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் மாடியில் கொலைசெய்யப்பட்டு கிடந்தாா். அவா் அணிந்திருந்த ஒன்றரைப் பவுன் தங்க சங்கிலி, ஒரு கிராம் மோதிரம் ஆகியவற்றை காணவில்லை.
இதுதொடா்பாக கோவில்பட்டி போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி இல் இருந்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகின்றன.