செய்திகள் :

கோவையில் பரோட்டா சாப்பிட்டு உறங்கிய மருத்துவ மாணவி பலி!

post image

கோவை மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மருத்துவ மாணவி, பரோட்டா சாப்பிட்டு இரவு உறங்கச் சென்றவர் மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை, துடியலூர் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பேர்லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் ( 62). இவர் கட்டுமான ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது மகள் கீர்த்தனா (வயது 21). இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக கல்லூரியில் உள்ள விடுதியில் கீர்த்தனா தங்கி இருந்தார்.

வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு வந்து பெற்றோருடன் விடுமுறை நாள்களை கீர்த்தனா கழித்து விட்டுச் செல்வார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல வீட்டிற்கு வந்து இருந்தார்.

கீர்த்தனா சனிக்கிழமை இரவில் சாப்பிடுவதற்கு பரோட்டா வேண்டுமென கேட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு குடும்பத்தினர் கடையில் பரோட்டா வாங்கி கொடுத்து உள்ளனர். அதை கீர்த்தனா சாப்பிட்டார்.

பிறகு இரவு அவரது அறைக்குச் சென்று தூங்கினார். வழக்கமாக கீர்த்தனா காலையில் சீக்கிரம் எழுந்து விடுவார். ஆனால் நேற்று காலை வெகு நேரம் ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரது அறைக்கு எழுப்பச் சென்று உள்ளனர். அப்போது அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எழுப்பி பார்த்த போது அவரது உடலில் அசைவு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக கீர்த்தனாவை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு கீர்த்தனாவை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் கூறினர். உடனே அவர் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கீர்த்தனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் துணை முதல்வர் நேரில் ஆய்வு!

ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.இதனிடையே, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பார்வையிட்டு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.வங்கக்கடலில் உருவாகி... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரித் தேர்வுகள் ஒத்திவைப்பு!

ஃபென்ஜால் புயலால் பெய்துள்ள கனமழையால் விழுப்புரம், திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.இந்த நிலையில், நாளை(டிச. 3) நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்... மேலும் பார்க்க

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீரானது!

ஃபென்ஜால் புயலால் பெய்துள்ள கனமழையால் விழுப்புரம், திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.இந்த நிலையில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பி... மேலும் பார்க்க

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி இம்மாதம் 10-ஆம் தேதி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிச. 10-க்கு பின் அபராதத்துடன் சேர்த்து மின்கட... மேலும் பார்க்க

எந்தெந்த பகுதிகளில் நாளை (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் வட தமிழகத்தில் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், கடலூர்,விழுப்புரம்,புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும்,திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி(ஊத்தங்கரை, போச்சம்... மேலும் பார்க்க