Fengal: ஷோ காட்டும் ஸ்டாலின்… வெடிக்கும் சசிகலா - Marakkanam Live Report | Cyclo...
Rain Alert: 'டிசம்பர் மாதம் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும்' - வானிலை ஆய்வு மையம் தகவல்
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதையடுத்து இந்த டிசம்பர் மாதத்திற்கான பருவமழை ஆரம்பிக்கவிருக்கிறது.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் வடதமிழகக் கடலோரப் பகுதிகளான புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக் கொட்டித் தீர்த்துள்ளது. திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையடுத்து இந்த டிசம்பர் மாதம் பருவமழை ஆரம்பிக்கவிருக்கிறது. இந்நிலையில் இந்த டிசம்பர் மாதம் இயல்பை விடக் கூடுதலாக மழைப் பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், "தென் இந்திய மாநிலங்களில் இந்த டிசம்பர் மாதத்தில் இயல்பை விடக் கூடுதலாக மழை பெய்யும். தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா, கேரளா, தெற்கு கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இயல்பை விட 31 சதவீதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது." என்று தெரிவித்திருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...