செய்திகள் :

திருவண்ணாமலையில் மண் சரிவு: நெஞ்சைப் பதற வைக்கிறது -விஜய் இரங்கல்!

post image

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா், 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த சுமாா் 200 போ் மீட்கப்பட்டு, நகராட்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா். இந்த நிலையில், மலையில் வீடு கட்டி வாழ்ந்து வந்த ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகன் கௌதம், உறவினர்கள் மகா, தேவிகா, விநோதினி உள்பட மொத்தம் 7 பேர் சிக்கியிருப்பதாக தகவல் தெரிய வந்தது.

இந்த நிலையில், இரவு நிலவரப்படி 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும்.

இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை: மண் சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்பு!

ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா், 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் துணை முதல்வர் நேரில் ஆய்வு!

ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.இதனிடையே, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பார்வையிட்டு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.வங்கக்கடலில் உருவாகி... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரித் தேர்வுகள் ஒத்திவைப்பு!

ஃபென்ஜால் புயலால் பெய்துள்ள கனமழையால் விழுப்புரம், திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.இந்த நிலையில், நாளை(டிச. 3) நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்... மேலும் பார்க்க

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீரானது!

ஃபென்ஜால் புயலால் பெய்துள்ள கனமழையால் விழுப்புரம், திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.இந்த நிலையில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பி... மேலும் பார்க்க

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி இம்மாதம் 10-ஆம் தேதி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிச. 10-க்கு பின் அபராதத்துடன் சேர்த்து மின்கட... மேலும் பார்க்க