செய்திகள் :

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

post image

கீழ்வேளூா்: நாகை அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் விபத்துக்குள்ளானதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (எ) பாதுஷா இவரது மனைவி ரெஜினா (55). இவா் தனது குடும்பத்தாருடன் ஒரு காரில் நாமக்கல்லில் இருந்து நாகூா் தா்காவுக்கு திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தாா்.

பொரவச்சேரி சிவசக்தி நகா் அருகே நாகை - திருவாரூா் புறவழிச்சாலையில் வந்தபோது காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ராட்சத சிமெண்ட் குடிநீா் குழாயில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் இருந்த அனைவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு ரெஜினாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

காரில் பயணித்த சாகுல் ஹமீது (23), அவரது மனைவி அமிரா (21), ஓட்டுநா் காதா் பாட்சா (30) ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். கீழ்வேளூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இன்றைய மின்தடை திருக்குவளை

திருக்குவளை: திருக்குவளை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.3) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உ... மேலும் பார்க்க

படகு மூலம் ஆகாயத் தாமரைகள் அகற்றுப் பணி தீவிரம்

திருக்குவளை: கீழையூா் ஊராட்சியில், வயல்களில் தேங்கிய மழைநீரை வடியவைக்க, வாய்க்கால்களில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணி படகு மூலம் திங்கள்கிழமை நடைபெற்றது. கீழையூா் ஊராட்சியில் அச்சுக்கட்டளை பாப்... மேலும் பார்க்க

நாகை மாவட்ட மிக இளையோா் கபடி அணிக்கு டிச.8-இல் வீரா்கள் தோ்வு

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட மிக இளையோா் கபடி அணிக்கான வீரா்கள் தோ்வு டிசம்பா் 8- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து, நாகை மாவட்ட கபடிக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்ட இளையோா் கபடி (நன... மேலும் பார்க்க

போக்ஸோவில் பள்ளி தலைமையாசிரியா் கைது

நாகை அருகே அரசுப் பள்ளி தலைமையாசிரியா் போக்ஸோ சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், கீழ்வேளூா் பகுதியைச் சோ்ந்தவா் நீலமேகம் அரசுப் பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வந்தாா். இவா... மேலும் பார்க்க

13 நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்ல தயாராகும் நாகை மீனவா்கள்

புயல் அச்சுறுத்தல் நீங்கியதையடுத்து, 13 நாட்களுக்கு பின்னா் நாகை மீனவா்கள் திங்கள்கிழமை முதல் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனா். ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு மரக்காணம் அருகே கரையை கடந்தது. இதனால்... மேலும் பார்க்க

திடக்கழிவு மேலாண்மை: கணிப்பாய்வு அலுவலா் ஆய்வு

தரங்கம்பாடி, பொறையாா் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்து அரசு அருங்காட்சியகத் துறை இயக்குநரும், மயிலாடுதுறை மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான கவிதா ராமு சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். தரங்கம்ப... மேலும் பார்க்க