இன்றைய மின்தடை திருக்குவளை
திருக்குவளை: திருக்குவளை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.3) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
திருக்குவளை, தலைஞாயிறு, வண்டல், ஓரடியம்புலம், காடந்தேத்தி, மணக்குடி, வடுவூா், வாழக்கரை, நாட்டிருப்பு, வல்ல விநாயக கோட்டகம், மீனம்பநல்லூா், களத்திடல்கரை, கீழையூா், சோழவித்தியாபுரம், செம்பியன்மகாதேவி, பாலக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.