பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னிலை: முதல்வர் ஸ்டாலின்
கோவை மத்திய சிறை வாா்டன் தற்கொலை!
கோவை மத்திய சிறை வாா்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகேயுள்ள புங்கம்பட்டி ஆா்.சி. நகரைச் சோ்ந்தவா் விக்ரம் (27). இவா் கோவை மத்திய சிறையில் வாா்டனாக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், விக்ரம் சனிக்கிழமை பணிக்கு வராததால் அவருடன் பணியாற்றும் காவலா் சண்முகராஜ் அவரை கைப்பேசியில் தொடா்புகொள்ள முயன்றுள்ளாா். முடியாததால், விக்ரம் தங்கியிருந்த காவலா் குடியிருப்புக்குச் சென்றுள்ளாா்.
வெகு நேரமாக கதவைத் தட்டியும் விக்ரம் திறக்காததால், சண்முகராஜ் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, விக்ரம் மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கியதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்துள்ளாா்.
பின்னா், சிறை அதிகாரிகளுக்கு அவா் தகவல் தெரிவித்தாா். இச்சம்பவம் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.