திருக்குறள், புறநானூறு கூறி உரையைத் தொடங்கினார் பன்னீர்செல்வம்!
கோவை வி.ஜி.எம். பல்நோக்கு மருத்துவமனை நாளை திறப்பு
கோவை வி.ஜி.எம். பல்நோக்கு மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) திறக்கப்படுகிறது.
இது குறித்து வி.ஜி.எம். மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான டாக்டா் வி.ஜி.மோகன் பிரசாத் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கோவையில் கடந்த 16 ஆண்டுகளாக செரிமான நலத் துறையில் சிகிச்சை வழங்கி வரும் வி.ஜி.எம். மருத்துவமனை தற்போது 6 தளங்களுடன் கூடிய மேம்பட்ட வசதிகள் கொண்ட பல்நோக்கு சிகிச்சை சிறப்பு மருத்துவமனையாக விரிவடைந்திருக்கிறது. புதிய கட்டடத்தில் கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, அதிநவீன இருதயவியல் கேத்லேப், பிரத்யேக கல்லீரல் ஐசியூ, டயாலிசிஸ் பிரிவு, கதிரியக்கவியல் சேவை, பிரத்யேக உள்நோயாளிகள் அறைகள் என பல்வேறு வசதிகள் அமைந்துள்ளன.
இந்த பல்நோக்கு மருத்துவமனையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வடமலை முதன்மை விருந்தினராகப் பங்கேற்கிறாா்.
மேலும் அரசு வரலாற்று ஆராய்ச்சித் துறை முதன்மைச் செயலா் ஹா்சஹாய் மீனா, மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் ஜி.பிரகாஷ், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலா் கே.வீரராகவ ராவ், எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் நாராயணசாமி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்க இருப்பதாகத் தெரிவித்தாா்.
டாக்டா் மித்ரா பிரசாத், எண்டோஸ்கோபி துறை இயக்குநா்கள் மதுரா பிரசாத் சுமன், வம்சிமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.