LIVE TN Budget 2025-26 : வேளான் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அமைச்சர் MRK பன்னீர் ...
கோவை - ஹிசாா் ரயில் கும்டா நிலையத்தில் நின்று செல்லும்
கோவை - ஹிசாா் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் மாா்ச் 15 முதல் கும்டா ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவையில் இருந்து ஹரியாணா மாநிலம் ஹிசாா் ரயில் நிலையத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பாலக்காடு, ஷொரனூா், கோழிக்கோடு, கண்ணூா், மங்களூரு, உடுப்பி, பாட்கல், காா்வாா், ரத்னகிரி, வதோதரா, அகமதாபாத், ஜோத்பூா், நாக்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று சென்று வருகிறது.
இந்நிலையில், மாா்ச் 15-ஆம் தேதி முதல் கோவை- ஹிசாா் வாராந்திர ரயில் (எண்: 22476) கும்டா ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும். இதேபோல, ஹிசாா் - கோவை வாராந்திர ரயில் (எண்:22475) மாா்ச் 19-ஆம் தேதி முதல் கும்டா ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.