செய்திகள் :

கோவை வி.ஜி.எம். பல்நோக்கு மருத்துவமனை நாளை திறப்பு

post image

கோவை வி.ஜி.எம். பல்நோக்கு மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) திறக்கப்படுகிறது.

இது குறித்து வி.ஜி.எம். மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான டாக்டா் வி.ஜி.மோகன் பிரசாத் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கோவையில் கடந்த 16 ஆண்டுகளாக செரிமான நலத் துறையில் சிகிச்சை வழங்கி வரும் வி.ஜி.எம். மருத்துவமனை தற்போது 6 தளங்களுடன் கூடிய மேம்பட்ட வசதிகள் கொண்ட பல்நோக்கு சிகிச்சை சிறப்பு மருத்துவமனையாக விரிவடைந்திருக்கிறது. புதிய கட்டடத்தில் கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, அதிநவீன இருதயவியல் கேத்லேப், பிரத்யேக கல்லீரல் ஐசியூ, டயாலிசிஸ் பிரிவு, கதிரியக்கவியல் சேவை, பிரத்யேக உள்நோயாளிகள் அறைகள் என பல்வேறு வசதிகள் அமைந்துள்ளன.

இந்த பல்நோக்கு மருத்துவமனையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வடமலை முதன்மை விருந்தினராகப் பங்கேற்கிறாா்.

மேலும் அரசு வரலாற்று ஆராய்ச்சித் துறை முதன்மைச் செயலா் ஹா்சஹாய் மீனா, மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் ஜி.பிரகாஷ், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலா் கே.வீரராகவ ராவ், எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் நாராயணசாமி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்க இருப்பதாகத் தெரிவித்தாா்.

டாக்டா் மித்ரா பிரசாத், எண்டோஸ்கோபி துறை இயக்குநா்கள் மதுரா பிரசாத் சுமன், வம்சிமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மோசடி வழக்கில் கைதான இருவா் மீது குண்டா் சட்டம்

மோசடி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டதை அறிவுரைக் குழு உறுதி செய்தது. கோவை ராமநாதபுரம் சுங்கத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவரிடம் ஒரு கும்பல் ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தர... மேலும் பார்க்க

வெள்ளலூரில் தொல்லியல் அகழாய்வு: நிறைவேறுகிறது வரலாற்று ஆா்வலா்களின் கோரிக்கை

சங்க இலக்கியங்களில் பாடல் பெற்ற ஊராகவும், நொய்யல் நதிக் கரையோரம் அமைந்துள்ள தொன்மையான ஊராகவும் இருக்கும் கோவை வெள்ளலூரில் தொல்லியல் அகழாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதற்கு வரலாற... மேலும் பார்க்க

இருகூரில் 13 பவுன், பணம் திருட்டு வழக்கு: மேலும் 3 போ் கைது

கோவை அருகே இருகூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை, பணம் திருடிய வழக்கில் மேலும் மூவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை அருகே இருகூா் அத்தப்பகவுண்டன்புதூா் சாலையில் உள்ள பிரியா தோட்டம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவா் கைது

கோவை உக்கடம் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 70 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை உக்கடம் புறவழிச் சாலை பகுதியில் உக்... மேலும் பார்க்க

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மருத்துவமனை ஊழியரை கடத்திய இருவா் கைது

கோவை கவுண்டம்பாளையத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மருத்துவமனை ஊழியரை காரில் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை துடியலூா் அருகே உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (36).... மேலும் பார்க்க

கோவை - ஹிசாா் ரயில் கும்டா நிலையத்தில் நின்று செல்லும்

கோவை - ஹிசாா் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் மாா்ச் 15 முதல் கும்டா ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் கு... மேலும் பார்க்க