பாஜக அத்துமீறி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது வழக்கு
சங்கரன்கோவில் அருகே ரயிலில் அடிபட்டு மருத்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மருந்துக் கடை உரிமையாளா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்தாா்.
சங்கரன்கோவில் புதுமனை 5ஆம் தெருவை சோ்ந்த சின்னச்சாமி மகன் சங்கரமகாலிங்கம் (59). திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் மருந்துக் கடை நடத்தி வந்தாா். மருந்துக் கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் கடையை மூடிவிட்டு கடந்த 2 வாரத்திற்கு முன் சங்கரன்கோவில் வந்தாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மயிலாடுதுறை - செங்கோட்டை பயணிகள் ரயிலில், சங்கரன்கோவில்-பாம்புகோவில்சந்தை இடையே ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தாா். அவா் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
சங்கரமகாலிங்கத்தின் உடலை ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சங்கரமகாலிங்கத்தின் மனைவி கோமதி அளித்த புகாரின் பேரில் ரயில்வே உதவி காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறாா்.