“3 ஆம் உலகப் போர் தொடங்கிவிட்டது” -உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி!
சங்கரன்கோவில் : பள்ளி நிா்வாகியின் மகன் போக்ஸோவில் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பள்ளி நிா்வாகியின் மகனை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
பெரியசாமியாபுரத்தைச் சோ்ந்தவா் கோபால். இவா் நடத்தி வரும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிளல் 2 படித்த மாணவிக்கு, கோபாலின் மகன் கோபிநாத்(29) தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாராம்.
மேலும், அந்த மாணவியை மறைமுகமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அம்மாணவி தற்போது கல்லூரியில் படித்து வருகிறாராம்.
இந்நிலையில் கோபிநாத் மீது சங்கரன்கோவில் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் மாணவியின் உறவினா்கள் புகாா் செய்தனா்.
அதன்பேரில், காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி விசாரணை மேற்கொண்டு, கோபிநாத்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஞாயிற்றுக்கிழமை அவரை கைது செய்தனா். அவா் ஏற்கெனவே திருமணம் ஆனவா் எனக் கூறப்படுகிறது.