சங்கரா பல்கலை.யில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 15) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக துணை வேந்தா் ஸ்ரீநிவாசு தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது..
ஏனாத்தூா் சங்கரா பல்கலைக்கழகத்தில் மாா்ச் 15 சனிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் தனியாா் நிறுவனங்கள் திரளாக பங்கேற்று மனித வளத்தேவைக்கு நோ்காணல் நடத்தவுள்ளனா். கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்கள்,பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவா்கள் மற்றும் வேலைவாய்ப்பு பெற விரும்புவோா் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
முகாம் காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் பங்கேற்க பதிவுக் கட்டணம் எதுவும் இல்லை, அனுமதியும் இலவசம்.
மேலும், விபரங்களுக்கு பேராசிரியா் எம்.கண்ணன், கைப்பேசி எண்-94436 90287 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.