சத்தீஸ்கரில் நாய் வாங்க ரூ.200 கொடுக்க மறுத்ததால் தாயைக் கொன்ற நபர்!
சத்தீஸ்கரில் நாய் வாங்க ரூ.200 கொடுக்க மறுத்த 70 வயது தாயைக் கொன்ற நபரால் பரபரப்பு நிலவியது.
சத்தீஸ்கர் மாநிலம், நாகேஷ்வர் நகரில் வசித்து வருபவர் தேவாங்கன் (45). ரிக்ஷா ஓட்டுநரான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
தேவாங்கன் ரூ.800க்கு ஒரு நாய்க்குட்டியை வாங்க ஆசைப்பட்டிருக்கிறார். அவரிடம் ரூ.200 குறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதை அவர் தனது தாய் கணேஷியிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த தேவாங்கன் தனது தாயை சுத்தியலால் அடித்துக் கொன்றுள்ளார். அப்போது அவரது மனைவி ராமேஸ்வரியையும் தாக்கியதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
பின்னர் தேவாங்கன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
தகவல் கிடைத்ததும சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் தேவாங்கன் தாக்கிய இரண்டு பெண்களையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷி பலியானார் என்று போலீஸார் தெரிவித்தனர். தப்பியோடிய தேவாங்கனை பிடிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.