MGR - எடப்பாடியை Overtake செய்யும் MODI? | DMK அமைச்சர்களின் Fun பொங்கல்| TVK VI...
சத்தீஸ்கரில் 12 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் பிஜபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 12 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இவா்களுடன் சோ்த்து, சத்தீஸ்கரில் இம்மாதம் இதுவரை 29 நக்ஸல்கள் கொல்லப்பட்டுள்ளனா்.
பிஜபூா் நடவடிக்கை தொடா்பாக காவல்துறை உயரதிகாரி கூறுகையில், ‘தெற்கு பிஜபூா் வனப் பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் ‘கோப்ரா’ (வனப்பகுதி அதிரடி நடவடிக்கை பிரிவு) வீரா்கள், மாநில காவல் துறையின் ரிசா்வ் படையினா் அடங்கிய கூட்டுப் படையினா் வியாழக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.
மாலை வரை நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொடா்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரால் கடந்த ஆண்டு மொத்தம் 219 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.