செய்திகள் :

சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

post image

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களின் எல்லையிலுள்ள வனப்பகுதியில் இன்று (ஜன.9) காலை நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் மத்தியில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் மாநில துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஜன.6 அன்று பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவிலுள்ள நக்சல்களை முழுமையாக அழித்து விடுவோம் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, இன்று (ஜன.9) மாவட்ட ரிசர்வ் காவல் படை, சிறப்பு அதிரடி படை மற்றும் சி.ஆர்.பி.எஃப் இன் கம்மாண்டோ படையினர் இணைந்து நடத்திய இந்த தாக்குதல் நடவடிக்கையில் தற்போது 3 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு (2025) துவங்கியதில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு நடவடிக்கைகளில் மொத்தம் 9 நக்சல்கள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மண்டகப்படியின் போது திவ்ய பிரபந்தம் பாடுவதில் வடகலை-தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சாமி தரிசனம் ச... மேலும் பார்க்க

சிதம்பரம் திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு!

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் உள்ளே உள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளினை முன்னிட்டு பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு நிகழ்ச்சி வெள... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.10 அடியில் இருந்து 115.65 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.10) காலை 831 அடியில் இருந்து 758 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட வைணவத் தலங்களில் பரமபத வாசல் திறப்பு

விழுப்புரம்: வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபத வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.விழுப்புரம் நகரின் பழைமை வாய்ந்த அருள்மிகு ஜனகவல்லித் ... மேலும் பார்க்க

கிங்ஸ்டன் பட டீசர்!

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி - 25 படத்தை கமல் ... மேலும் பார்க்க

பொங்கல்: ஜன. 10 - 13 வரை கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் திருநாளை முன்னிட்டு, 10.01.2025 முதல் 13.012025 வரை கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.14.01.2025 பொங்கல் பண்டிகையை முன்னிட... மேலும் பார்க்க