'எமர்ஜென்சி' படத்தைப் பார்க்க கங்கனா அழைப்பு! ராகுல், பிரியங்காவின் பதில் என்ன?
சத்துணவு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புப் படி உயர்வு!
சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்புப் படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் கூடுதலாக சத்துணவு மையத்தை கவனித்து வந்தால், அவர்களுக்கு பொறுப்புப் படியாக நாளொன்றுக்கு ரூ. 20 வீதம் மாதத்துக்கு ரூ. 600 வழங்கப்பட்டு வருகின்றது.
இதையும் படிக்க : டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு: விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்
இந்த நிலையில், கூடுதல் பொறுப்புப் படி நிதியை ரூ. 33 ஆக உயர்த்தி தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் சத்துணவு மையங்களுக்கு பொறுப்பு வகிக்கும் ஊழியர்களுக்கு நாளொன்று ரூ. 33-ம், ஒரு மாதம் முழுவதும் பணிபுரிந்தால் ரூ. 1,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு மேல் கூடுதல் மையத்தை கவனித்துக் கொள்பவர்களுக்கு மட்டுமே பொறுப்புப் படி வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பொறுப்புப் படி உயர்வானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதற்காக கூடுதலாக ரூ. 6.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.