செய்திகள் :

சத்யநாராயண பூஜை: சங்கல்பம் செய்து கொள்ள சகல வேண்டுதலும் நிறைவேறும்; சாய்பாபாவின் அற்புதம் காணுங்கள்

post image

2025 ஏப்ரல் 10-ம் நாள் வியாழக்கிழமை பங்குனி வளர்பிறை திரயோதசி நன்னாளில் இங்கு பிரமாண்ட விழாவும் சத்யநாராயண பூஜையும் நடைபெற உள்ளது. இந்த பூஜையால் அமைதியான வாழ்வும், விரும்பிய ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சத்யநாராயண பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலை அருகே பொற்றையடியில் அமைந்திருக்கிறது ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம். இங்கே ஆனந்தமயமான ஸ்ரீசாய்பாபா அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். 13 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தருளிய ஆனந்த பாபா பக்தர்கள் குறைகள் போக்கி வரமருள்கிறார். இந்த ஆண்டு 13-வது வருஷாபிஷேக நாளில் (10-4-2025) பிரமாண்ட அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன, வாசகர்கள் இங்கு சங்கல்பம் செய்து கொண்டால் சகல வேண்டுதலும் நிறைவேறும் என்பது நிச்சயம்.

கன்னியாகுமரி பொற்றையடி ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம்

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் 7 கி.மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. வெற்றி விநாயகர் சந்நிதி, தத்தாத்ரேயர் சந்நிதி, குரு ஸ்தான், தியானம் மண்டபம் போன்றவை அமைந்த பிரமாண்ட ஆலயமிது. இங்கு மாதம்தோறும் சிறப்பு அபிஷேகங்கள் டி.கே.எஸ் ஐயா அவர்களால் நடத்தப்பட்டு பிறகு பக்தர்களும் தங்கள் கரங்களாலேயே ஆனந்த பாபாவுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இங்கு தரப்படும் உதி பிரசாதம் விசேஷமானது சகல துக்கங்களையும் நோய்களையும் தீர்க்கக் கூடியது என்கிறார்கள் பக்தர்கள். வெண்பளிங்காலான ஸ்ரீசாயிக்கு முன்னால் சூரிய காந்தக் கல்லாலான ஸ்ரீசாயி திருப்பாதம் அமைந்துள்ளது.

கன்னியாகுமரி பொற்றையடி ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம்

2009-ம் ஆண்டு இந்த பகுதியில் குருஜி சி.பி.சத்பதி மற்றும் டி.கே.எஸ் ஐயா அவர்களின் முயற்சியால் ஆலயப் பணிகள் தொடங்கி 4.4.2012 அன்று பங்குனி மாத பூர நட்சத்திர நாளில் இந்த ஆனந்த சாய்பாபா ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 13-வது வருஷாபிஷேக நன்னாளை ஒட்டி இங்கு 3006 லிட்டர் பாலாபிஷேகமும் மற்றும் வெவ்வேறு திரவியங்களால் மகா அபிஷேகங்களும் பல்வேறு ஆராதனைகள், புறப்பாடுகள் நடைபெற உள்ளன. சர்வ வஸ்ய யாகம் மற்றும் கோபுர கலச அபிஷேகம் சிறப்பு ஆரத்திகள் நடைபெற உள்ளன. கலைமாமணி வீரமணி ராஜு மற்றும் அபிஷேக் ராஜு அவர்களின் இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது.

சாயி பக்தர்கள் பாபாவுக்கான வழிபாட்டு முறைகளில் முக்கியமாக கடைப்பிடிப்பது ஶ்ரீசாயி சத்யநாராயண பூஜை. சாயி மகான் வாழும் காலத்தில் அவருக்கு அவரால் செய்ய அனுமதிக்கப்பட்ட பூஜை ஶ்ரீசாயி சத்யநாராயண பூஜை மட்டுமே. இந்த பூஜையை செய்வதன் மூலம் ஸ்ரீசாயியின் அருள் பரிபூரணமாக நம் குடும்பங்களில் விளங்கும். இதனால் நீங்காத நோய்கள், வறுமை, பயம், தோல்வி ஆகியவை விலகி வாழ்க்கை மகிழ்ச்சியும் செழிப்புமாக மாறும் என்பது ஸ்ரீசாயி அன்பர்களின் நம்பிக்கை. அப்படிப்பட்ட ஶ்ரீ சாயிசத்யநாராயண பூஜையை சக்திவிகடன் வாசகர்களின் நலன்வேண்டி நடத்த இருக்கிறது.

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

கன்னியாகுமரி ஆனந்த பாபா ஆலயத்தில் 10-4-2025 அன்று இந்த சத்யநாராயண பூஜை நடைபெற உள்ளது. இதில் நீங்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

கன்னியாகுமரி பொற்றையடி ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம்

சத்யநாராயண பூஜை பலன்கள்...

சத்யநாராயண பூஜை செய்தால் துன்பங்கள் நீங்கும். இன்பமும் மகிழ்ச்சியும் வளரும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். பெண்கள், சுமங்கலிகளாக இருப்பார்கள். வியாபாரம்-தொழில் மேன்மேலும் பெருகும். கல்வியில் மேன்மை அடையலாம். இங்கு தரப்படும் உதியால் அதிர்ஷ்டம் பெருகும். தோஷங்கள் நீங்கும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, உதி பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சமயபுரம் தல வரலாறு: அர்த்த ஜாமத்தில் கொலுசுச் சத்தம்; அம்மனே நமக்காக விரதம் இருக்கும் அதிசயம்

ஶ்ரீரங்கம், 108 திவ்ய தேசங்களில் தலைமைப்பீடம். அங்குதான் ஆதியில் கோயில் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. அண்ணன் அரங்கன் அமைதியே உருவான சாந்தமூர்த்தி. ஆனால் தங்கையோ ருத்ர ரூபிணி. அவளின் ருத்ராம்சம் பொறுக்கமுடிய... மேலும் பார்க்க

`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; பதிவு செய்யுங்கள்

2025 மார்ச் 28-ம் தேதி சென்னை கொரட்டூர் பாடலாத்ரி சீயாத்தம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம். அதுகுறித்... மேலும் பார்க்க

கச்சத்தீவு: விமர்சையாக நடைபெற்ற அந்தோணியார் ஆலய திருவிழா; குவிந்த இருநாட்டு பக்தர்கள் | Photo Album

Katchatheevu row: கச்சத்தீவு அரசியல் நமக்கு என்ன கொடுக்கும்? - ஒரு விரிவான அலசல்!வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Pa... மேலும் பார்க்க

வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம... மேலும் பார்க்க

சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பௌர்ணமி விளக்கு பூஜை; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆண்டு முழுவ... மேலும் பார்க்க

விநாயகர் தலவரலாறு: எவ்வளவு தேனை அபிஷேகித்தாலும் அப்படியே உறிஞ்சும் அதிசய விநாயகர் - திருப்புறம்பியம்

திருப்புறம்பியம்... சோழர்கள் வரலாற்றையே மாற்றி எழுதிய ஊர். கி.பி.895 - ல் விசயாலயச் சோழனின் மகன் ஆதித்த சோழன், கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி ஆகியோர் பல்லவருடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்துப் போரிட்ட... மேலும் பார்க்க