புதுச்சேரியில் அடுத்த 2 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
சபரிமலையில் 9 நாட்களுக்குள் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!
ஆண்டுதோறும் மகரவிளக்கு யாத்திரையை முன்னிட்டு, சரண கோஷங்களுக்கு மத்தியில், இந்தாண்டு சபரிமலை நடை திறக்கப்பட்டது.
இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்ததாவது:
நவம்பர் 16 ஆம் தேதி கோயிலின் நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜை வழிபாடுகள் விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகின்ற நிலையில், இது வரையான ஒன்பது நாட்களுக்குள் 6,12,290 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3,03,501 பக்தர்களுடன் ஒப்பிடும் போது இது குறிப்பிடத்தக்க விதமாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: பதஞ்சலி வருவாய் 23% அதிகரிப்பு!
இந்த காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வருவாய் கணிசமாக உயர்ந்து ரூ.41.64 கோடியாக உள்ளது. இதுவே முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது ரூ.13.33 கோடி அதிகரித்துள்ளது.
பக்தர்களின் சுமூகமான தரிசனத்துக்கு வண்டிப்பெரியார் சத்திரம், எருமேலி மற்றும் பம்பா ஆகிய மூன்று இடங்களில் ஆன்லைன் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் பக்தர்களின் வருகையை சமாளிக்க பம்பா மணப்புரம் ஆன்லைன் புக்கிங் சென்டரில் விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தரிசனம் இல்லாமல் பக்தர்கள் திரும்ப வேண்டிய சூழ்நிலை இல்லை என்று உறுதியளித்த பிரசாந்த், அதிகரித்து வரும் யாத்ரீகர்களை நிர்வகிக்க ஆன்லைன் முன்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிக்க: மகாராஷ்டிரம்: 60 ஆண்டுகளுக்குப்பின் எதிர்க்கட்சித் தலைவர் இல்லா பேரவை!
பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையின் நகலை முன்பதிவு மையத்துக்கு எடுத்து வருமாறும், சபரிமலையில் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பதன் மூலம் கோயிலின் சுற்றுச்சூழலுக்கும் யாத்ரீகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
இந்த வேளையில் தந்திரி கண்டரரு ராஜீவரு, பக்தர்கள் தங்கள் இருமுடிக்கட்டில் பிளாஸ்டிக்கை கலக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
புனித பம்பா நதியில் ஆடைகளை விட்டுச் செல்வது எந்தவொரு சடங்கின் ஒரு பகுதியும் அல்ல என்பதை வலியுறுத்திய பிரசாந்த், நதியை மாசுபடுத்துவதைத் தவிர்க்குமாறு பக்தர்களை வலியுறுத்தினார்.