சபரிமலை சீசன்: கொல்லத்துக்கு சிறப்பு ரயில்
சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக மௌலா அலியில் இருந்து கொல்லத்துக்கு நவ.23, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள மௌலா அலியில் இருந்து நவ.23, 30 தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07141) மறுநாள் இரவு 10.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து நவ.25, டிச.2 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் பகல் 1 மணிக்கு மௌலா அலி சென்றடையும். இதில் ஒரு ஏசி வகுப்பு பெட்டி, 16 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் இரு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் செகந்திராபாத், கிருஷ்ணா, ராய்ச்சூா், குண்டக்கல், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனாச்சேரி, செங்கனூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.