Mumbai: "தாராவி நிலத்தை அதானிக்குக் கொடுக்க நினைக்கிறார் மோடி" - ராகுல் பேச்சின்...
சபரிமலை மண்டல பூஜை: இன்று மாலை நடை திறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக இன்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது.
காா்த்திகை மாதம் தொடங்கி, மகரஜோதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவாா்கள்.
முதல் கட்டமாக மண்டல பூகைக்காக இன்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
இன்று மாலை 4 மணிக்கு தலைமை அர்ச்சகர் பிஎன் மகேஷ் நம்பூதிரி ஐயப்பன் சன்னதியில் விளக்கேற்றவுள்ளார். தொடர்ந்து, சபரிமலை மற்றும் மாளிகபுரம் கோயிலுக்கான புதிய தலைமை அர்ச்சகர்கள் பொறுப்பேற்கவுள்ளனர்.
மண்டல பூஜை டிச. 26 நடைபெறவுள்ளது. அதன்பின் நடை அடைக்கப்பட்டு டிச. 30-ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்படும்.
மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற்ற பிறகு, படிப் பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும்.
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் ஒரு நாளுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படவுள்ளனர். எரிமேலி, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : நவ. 19-ல் பொதுக் கணக்கு குழு கூட்டம்: செபி தலைவருக்கு சம்மன் அனுப்பவில்லை!
வானிலை எச்சரிக்கை: அமா்நாத் மற்றும் சாா்தாம் யாத்திரைகளைப் போல சபரிமலை யாத்திரைக்கு முதன்முறையாக உள்ளூா் வானிலை முன்னறிவிப்பு முறையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக சன்னிதானம், பம்பா மற்றும் நிலக்கல் ஆகிய மூன்று இடங்களில் வானிலை அளவீடு கருவிகளை பிராந்திய வானிலை மையம் நிறுவியுள்ளது. இந்த முன்னறிவிப்புகள் விரைவில் நிகழ்நேர வானிலை அறிவிப்புகளாக மேம்படுத்தப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.