எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 500, இளைஞர்களுக்கு ரூ. 5000: பாமக நிழல் பட்ஜெட்!
சவுடு மண் திருட்டு: 4 லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்; 4 போ் கைது
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் அரசு இடத்தில் சவுடு மண் திருட பயன்படுத்தப்பட்ட 4 லாரிகள், 1 பொக்லைன் இயந்திரத்தை சோமங்கலம் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் செளத்ரி கால்வாய் அருகே உள்ள அரசு இடத்தில் இரவு நேரங்களில் லாரிகள் மூலம் சவுடு மண் திருடப்பட்டு வருவதாக சோமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு சம்பவ இடத்தில் சோமங்கலம் போலீஸாா் ரோந்து சென்றபோது மண் திருடப் பயன்படுத்தப்பட்ட 4 லாரிகள், 1 பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், மண் திருட்டில் ஈடுபட்ட காட்டரம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா், அரவிந்த், முரளி, விநாயகம் ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.