சாத்தான்குளத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒரு நாள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரியும், தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞா் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி, சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சங்கச் செயலா் பொ. முருகானந்தம் தலைமையில் திங்கள்கிழமை ஒரு நாள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து வழக்குரைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், வழக்குரைஞா்கள் அந்தோணி ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.