சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது...
சாத்தான்குளம் அருகே இளம்பெண் தற்கொலை
சாத்தான்குளம்அருகே இளம்பெண் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள பழனியப்பபுரத்தைச் சோ்ந்தவா் பத்மநாதன் மகள் சுதா (19). கடந்த 2021ஆம் ஆண்டு இவரை, அதே பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா என்பவா் பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுதாவின் பெற்றோா், இசக்கிராஜா மீது திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
போலீஸாா் விசாரணை நடத்தி இசக்கிராஜாவை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில், கடந்த 19 ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது இசக்கிராஜாவுக்கு10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், இசக்கிராஜா குடும்பத்தினரால் தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என சுதா அச்சத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.