ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்ட...
சாமுண்டி தசரா... ருக்மணி வசந்த் பகிர்ந்த காந்தாரா பட போஸ்டர்!
நடிகை ருக்மணி வசந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் காந்தாரா சேப்டர் 1 படத்தில் இருந்து புதிய போஸ்டரைப் பகிர்ந்துள்ளார்.
இந்தப் போஸ்டரில் சாமுண்டி தசராவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
காந்தாரா சேப்டர் 1 படத்தினை இயக்குநர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ளார்.
காந்தாரா திரைப்படம் பெற்ற நல்ல வரவேற்பினால், இதன் முந்தைய உலகமாக காந்தாரா சேப்டர் 1 என்ற பெயரில் உருவான திரைப்படம் நேற்று (அக்.2) உலகம் முழுவதும் வெளியானது.
இந்தப் படத்தில் ருக்மணி வசந்த் இளவரசி கனவதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் மூலம், ருக்மணி வசந்த் ’நேஷனல் க்ரஷ்’ என ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் காந்தாரா போஸ்டரை வெளியிட்டு கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “சாமுண்டி தசராவின் புனிதமான நாளில் தெய்வீகம் நம்மை ஆசிர்வதிக்கட்டும் வழிநடத்தட்டும்.
தெய்வீக பிளாக்பஸ்டரை காண்கிறோம். திரையரங்குகளில் காந்தாரா சேப்டர் 1 வெற்றி நடைபோடுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.