செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியில் ரோஹித் சர்மா!

post image

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பினையும் இந்தியா இழந்தது. பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிக்க: இந்திய அணிக்காக விளையாடும் எண்ணம் இன்னும் இருக்கிறது: கருண் நாயர்

பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரும் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியை தொடங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபடும் விடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த விடியோவில் ரோஹித் சர்மா பல்வேறு விதமான ஷாட்டுகளையும் விளையாடி பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்க முடிகிறது.

இதையும் படிக்க: டெஸ்ட் தொடர் தோல்வி எதிரொலி: இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, மும்பை அணியுடன் இணைந்து அண்மையில் பயிற்சி மேற்கொண்டார். இதனால், அவர் ரஞ்சி கோப்பையில் விளையாடவுள்ளார் எனவும் கூறப்பட்டது. இருப்பினும், ஜம்மு காஷ்மீருக்கு எதிராக ஜனவரி 23 ஆம் தேதி மும்பை அணி விளையாடும் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா; இலங்கை தடுமாற்றம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 29)... மேலும் பார்க்க

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் விளாசிய டாப் 3 வீரர்கள்!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஜோஷ் இங்லிஷ் அதிவேகமாக சதம் விளாசி அசத்தினார்.ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி க... மேலும் பார்க்க

லாகூரில் பிப்.16-ல் சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழா!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் இணைந்து சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடக்க விழாவை பிப்ரவரி 16 அன்று லாகூரில் நடத்த திட்டமிட்டுள்ளது.இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலா... மேலும் பார்க்க

654 ரன்களுக்கு டிக்ளேர் செய்த ஆஸி.! 2 விக்கெட்டுகள் இழந்த இலங்கை அணி!

ஆஸ்திரேலிய அணி 654 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. நேற்று காலேவில் (ஜன.29) தொடங்கிய முதல் டெஸ்ட்டில் முதல்நாள் முடிவில் ஆஸி. அணி முதல்நாள் முடிவில் 81.1 ஓவரில் 330/2 ரன்கள் எடுத்திருந்தது.இரண்டாவது நாளில... மேலும் பார்க்க

விராட் கோலியைக் காணக் குவிந்த ரசிகர்கள்! நிரம்பி வழிந்த அருண் ஜேட்லி திடல்!

விராட் கோலியைக் காணக் குவிந்த ரசிகர்களால் தில்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானம் நிரம்பி வழிந்தது.ரஞ்சி டிராபிக்கான தில்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் விளையாடும் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜேட... மேலும் பார்க்க

சிறுவயதிலேயே பழக்கம்..! ஸ்மித்துடனான 20 ஆண்டுகால நட்பு குறித்து பேசிய கவாஜா!

ஸ்டீவ் ஸ்மித்துடன் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருவதாக கவாஜா கூறியுள்ளார். 38 வயதாகும் கவாஜா இலங்கை உடனான முதல் டெஸ்ட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். 232 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ட... மேலும் பார்க்க