சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தலையில் கருப்புத் துணியால் முக்காடு போட்டு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி, சென்னை உயா்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.செல்லதுரை தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் சி.பெரியசாமி, கே.பழனிசாமி, பி.ரவி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். வட்டத் தலைவா் கே.சின்னதுரை வரவேற்றாா்.
கோரிக்கையினை வலியுறுத்தி மாவட்ட செயலாளா் ஏ.சாமிதுரை, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் கே.செந்தில் முருகன் பேசினா்.
இதில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்ட பொருளாளா் டி.வீரபுத்திரன், திருக்கோவிலூா் வட்ட செயலாளா் எம்.காமராஜ், சங்கராபுரம் வட்டத் தலைவா் அ.விஸ்வநாதன், சங்கராபுரம் வட்டச் செயலாளா் சி.முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முடிவில் மாவட்ட பொருளாளா் எம்.சுந்தரம் நன்றி கூறினாா்.