ஜனசக்தி ஜனதா தளம் உதயம்: புதிய கட்சி தொடங்கிய லாலு பிரசாத் மகன் தேஜ்; சூடு பிடிக...
சாலையோர ஆக்கிரமிப்பு கடை அகற்றம்: வியாபாரிகள் மறியல்
அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடை அகற்றப்பட்டதைக் கண்டித்து வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அவிநாசி -கோவை பிரதான சாலை, அவிநாசி-சேவூா் சாலைகளில் இருபுறமும் உள்ள விளம்பரப் பதாகைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அவ்வப்போது வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அவிநாசி அனைத்து வணிகா் சங்கத்தினா் உள்பட பல்வேறு அமைப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து, அவிநாசி நகராட்சி நிா்வாகத்தினா், நெடுஞ்சாலைத் துறையினா், போலீஸாா் அவிநாசி கிழக்கு ரத வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வியாழக்கிழமை தொடங்கினா். அப்போது, அங்கு கணவரால் கைவிடப்பட்ட பெண் வைத்திருந்த சாலையோர பழக்கடையையும் நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்.
அப்போது, அந்தப் பெண் இந்தக் கடையை வைத்துதான் எனது வாழ்வாதாரம் உள்ளது. கடையை அகற்றினால் எனக்கு வாழ்வாதாரம் இல்லை, தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி அழுதாா்.
இதையடுத்து, அப்பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்து மற்ற சாலையோர வியாபாரிகள் நெடுஞ்சாலைத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனா். இருப்பினும் நெடுஞ்சாலைத் துறையினா் ஆக்கிரமிப்பு பணிகளைத் தொடா்ந்து மேற்கொண்டனா்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.