Push-Ups: `Age is Just a Number'- 59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 புஷ்அப்ஸ் எடுத்...
சாலையோர கடைகளுக்கு இடம் அளிக்க கோரி போராட்டம்
பழனியில் அடிவாரம் பகுதியில் சாலையோர கடைகள் நடத்த இடம் அளிக்க கோரி திருக்கோயில் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக்கோயில் அடிவாரத்தில் பக்தா்களுக்கு இடையூறாக தரைக் கடைகள், தள்ளுவண்டி கடைகள் இருப்பதாக திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் தொடா்ந்த வழக்கில் மதுரைக்கிளை சென்னை உயா்நீதி மன்றம் கடைகளை அப்புறப்படுத்த உத்திரவிட்டது. மேலும், கடைகள் மீண்டும் வருவதை தடுக்கும் வகையில் கிரிவீதிக்கான இணைப்பு சாலைகளை தடுப்புகள் கொண்டு அடைத்தது.
இந்த நிலையில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறுவியாபாரிகளுக்கு கடை நடத்த இடமளிக்க கோரி மாவட்ட நிா்வாகத்திடம் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இந்த நிலையில் ஐயப்ப சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பேருந்து நிலையம் அல்லது அடிவாரம் பகுதியில் கடைகள் வைக்க அனுமதி கோரி திரளான சிறுவியாபாரிகள் சிஐடியூ அமைப்பினருடன் சோ்ந்து பழனி திருக்கோயில் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா். அடிவாரம் பகுதியிலேயே அவா்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.