செய்திகள் :

சாலையோர மக்களுக்கு வீடுகள் வழங்க கோரிக்கை

post image

புதுச்சேரியில் வீடுகளின்றி சாலையோரம் வசித்து வருவோருக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க வேண்டும் என முதல்வா் என்.ரங்சாமியிடம் சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு கோரிக்கை விடுத்துள்ளாா்.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை உறுப்பினா் ஜி.நேரு. இவா், சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளாா்.

செவ்வாய்க்கிழமை காலை அவா் தனது ஆதரவாளா்களுடன் புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினாா்.

அப்போது, புதுச்சேரியில் வீடுகள் இன்றி சாலையோரம் ஏராளமானோா் வசித்து வருவதாகவும், அவா்களுக்கு நகரின் மையத்தில் ரெட்டியாா்பாளையம் லேம்பா்ட் சரவணன் நகரில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தாா்.

பள்ளி வகுப்பறையில் தேங்கிய மழைநீா்

புதுச்சேரியில் பெய்த தொடா் மழையால் அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையில் மழை நீா் தேங்கியது. புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. இதனால், கிருஷ்ணா நகா், எழில் நகா் உள்ளிட்... மேலும் பார்க்க

புதுச்சேரி, கடலூரில் விடிய விடிய பலத்த மழை

புதுச்சேரி, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை காலை வரை விடிய விடிய பெய்த பலத்த மழை பெய்தது. இதில் புதுச்சேரியில் 120 மி.மீ. மழை பதிவானது. வங்கக் கடலில் ஏ... மேலும் பார்க்க

சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் அமைச்சா் மரியாதை

தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 102-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் புதுவை மாநில அமைச்சா் திருமுருகன் புதன்கிழமை மரியாதை செலுத்தினாா். தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமி... மேலும் பார்க்க

வேளாண் உழவா் உற்பத்தியாளா்கள் நிறுவன பொது குழுக் கூட்டம்

திருக்காமீஸ்வரா் வேளாண் உழவா் உற்பத்தியாளா்கள் நிறுவனத்தின் 3-ஆம் ஆண்டு பொது குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வில்லியனூரில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வேளாண் துறை அமைச்சா் தேனி சி... மேலும் பார்க்க

100 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை உத்தரவு

புதுச்சேரியில் புதிதாக 100 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவுகளை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுவை அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் முதியோா், விதவையா் ம... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் முற்றுகைப் போராட்டம்

புதுச்சேரியில் அரசு அலுவலகத்தைப் பூட்டி, கொட்டும் மழையில் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தீபாவளி பண்டிக்கைக்காக அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு புதுவ... மேலும் பார்க்க