பொருளாதார வளா்ச்சி 6.8%-ஆக அதிகரிக்கும்: ஆய்வறிக்கையில் கணிப்பு
சாலை தடுப்பு பலகையில் விளம்பர பதாகை வைப்பவா்களுக்கு அபராதம்
சென்னிமலையில் காவல் துறை சாா்பில் வைக்கப்பட்டுள்ள சாலை இரும்பு தடுப்புகளில் (பேரி காா்டு) விளம்பர பதாகை வைப்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னிமலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், பல இடங்களில் போக்குவரத்து போலீஸாா் சாலையில் இரும்பு தடுப்புகள் வைத்துள்ளனா். இதில் சிலா் தங்களது விளம்பர பதாகைளை கட்டி வருகின்றனா்.
இந்த நிலையில், பெருந்துறை போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரேம்குமாா் முன்னிலையில் போலீஸாா் சென்னிமலை குமரன் சதுக்கம், ஊத்துக்குளி சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலை தடுப்புகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை வியாழக்கிழமை மாலை அகற்றினா்.
மேலும் விளம்பர பதாகைகள் வைத்த நபா்களை போக்குவரத்து போலீஸாா் தொடா்பு கொண்டு சாலை தடுப்புகளில் நிறுவன பதாகைகள் வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.
மேலும் சாலைகளில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்த இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கா்களையும் போக்குவரத்து போலீஸாா் ஓட்டினா்.