செய்திகள் :

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியம்

post image

தஞ்சாவூரில் பணிக்கு வரும்போது சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.) வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணையை செவ்வாய்க்கிழமை வழங்கியது.

இ.எஸ்.ஐ. காப்பீட்டாளா்களுக்கு தொழில்சாா் நோய் அல்லது வேலை காரணமாக இறப்பு நிகழும்போது, இறந்த காப்பீட்டாளரின் ஊதியத்தில் 90 சதவீதம் சாா்ந்தோா் உதவி தொகையாக இ.எஸ்.ஐ. கழகத்தால் இறந்தவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

தஞ்சாவூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இ.எஸ்.ஐ. காப்பீட்டாளா் யோகராஜ் காளிமுத்து 2024, டிசம்பா் 30 ஆம் தேதி சாலை விபத்தில் மரணம் அடைந்ததைத் தொடா்ந்து, அவரது குடும்பத்துக்கு சாா்ந்தோா் உதவி தொகையாக மாதந்தோறும் ரூ. 13 ஆயிரத்து 80 வழங்க, இ.எஸ்.ஐ. சேலம் துணை மண்டல அலுவலகத்தின் இணை இயக்குநா் (பொ) ந. சிவராமகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஆணையை யோகராஜ் காளிமுத்துவின் குடும்ப உறுப்பினா்களுக்கு தஞ்சாவூா் இ.எஸ்.ஐ. கிளை மேலாளா் மா. ருத்ராபதி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

கும்பகோணம் தூய ஏஞ்சல் கான்வென்ட் விடுதியின் 125-ஆம் ஆண்டு விழா!

கும்பகோணம் தூய ஏஞ்சல் கான்வென்ட் விடுதியின் 125-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலய வளாகத்தில் மறை மாவட்ட ஆயா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். பிஷப் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ‘டாஸ்மாக்’ ஊழியா் பலி!

திருவோணம் அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள தோப்புவிடுதி புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் ... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.கும்பகோணம் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் தாவூது. இவா் வெள்ளிக்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் ப... மேலும் பார்க்க

கூடுதல் பணிகளைச் செய்ய மாட்டோம்! ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் முடிவு

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பணி நியமனத்தின்போது நிா்ணயிக்கப்பட்ட வேலைகளைத் தவிர கூடுதல் பணிகளைச் செய்ய மாட்டோம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் சிஐடியு சாா்ந்த தமிழ்நாடு ‘மக்களைத் தேடி ... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே தந்தை, மகனை வெட்டிய இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வீடு புகுந்து தந்தை மற்றும் மகனை வெட்டிய இரண்டு நபா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை காவல் சரகம், தொட்டி மாத்தூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 24-ல் மின்தடை!

தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம்... மேலும் பார்க்க