செய்திகள் :

சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்!

post image

சாலை விபத்தில் உயிரிழந்த வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் ரூ.25 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சுப்பையா (57) கடந்த 21 ஆம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (அக் 25) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இதையும் படிக்க |அரசுப்பேருந்து நடத்துநர் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்!

காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

ரூ.25 லட்சம் நிவாரணம்

காவல் உதவி ஆய்வாளர் சுப்பையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

மிஸ்டர் மனைவி தொடரில் மாற்றப்பட்ட பிரபல நடிகை!

மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து நடிகை ஸ்மிருதி விலகியுள்ளார்.சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10.30 மணிக்கு மிஸ்டர் மனைவி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வேலைக்குச் சென்று சுதந்திரமாக... மேலும் பார்க்க

தொடர் மழையால் செந்நிறமாக மாறிய காவிரி!

பென்னாகரம்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் காவிரியில் வரும் நீர் செந்நிறமாக மாறியுள்ளது.கர்நாடகா ம... மேலும் பார்க்க

பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதியில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.அதிமுக முன்னாள் அம... மேலும் பார்க்க

நவ. 7-ல் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் நவ. 7 ஆம் தேதி விடுமுறை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ... மேலும் பார்க்க

அரசுப்பேருந்து நடத்துநர் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்!

பணியின்போது உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:சென்னை ... மேலும் பார்க்க