சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!
கர்நாடக மாநிலம் ஆவேரி மாவட்டத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
ஆவேரி மாவட்டத்தில் ஆவேரி-தர்வாட் நெடுஞ்சாலையில் ஹூபபள்ளி நோக்கி ஒரே குடும்பதைச் சேர்ந்த 4 பேர் தங்களது காரில் இன்று (டிச.25) பயணம் செய்துக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அந்த கார் அதன் கட்டுப்பட்டை இழந்து தடுப்புச்சுவரைத் தாண்டி மறுப்பக்க சாலையில் பெங்களூர் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதையும் படிக்க: 2024: வயநாடு நிலச்சரிவு பேரிடரல்ல, எச்சரிக்கை மணி!
இதில் அந்த காரில் பயணம் செய்துக்கொண்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த சம்பவம் குறித்து தகவலறித்து அங்கு விரைந்த திம்மாப்பூரின் தடாஸ் காவல் நிலைய அதிகாரிகள் படுகாயமடைந்த 2 பேரை மீட்டு கர்நாடக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், அவர்கள் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒரு 10-12 வயதுடைய குழந்தையும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.