சாலை விபத்தில் வேளாண் அலுவலா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை உதவிப் பொறியாளா் உயிரிழந்தாா்.
தேனி அருகே உள்ள சிவலிங்கநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்வலிங்கம் (32). இவா், திண்டுக்கல் வேளாண்மைப் பொறியியல் துறையில் உதவி பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் திண்டுக்கல்லிலிருந்து சிவலிங்கநாயக்கன்பட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். பெரியகுளம்-வத்தலகுண்டு சாலையில் பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது, எதிரே வந்த வேன், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தேவதானப்பட்டி அருகே உள்ள காட்ரோடு, ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் குருநாதன் மீது தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.