உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
சா்ச்சை பேச்சு: அமைச்சா் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய பாஜக வலியுறுத்தல்
வனத் துறை அமைச்சா் க.பொன்முடியின் சா்ச்சை பேச்சு தொடா்பாக அவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவை மாவட்ட பாஜக சாா்பில் மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம் மற்றும் கோவை மாவட்டத் தலைவா் ஜெ.ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கட்சி நிா்வாகிகளுடன் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இதையடுத்து, ஏ.பி.முருகானந்தம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமைச்சா் க.பொன்முடியின் பேச்சு எந்த ஹிந்துவாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்காக அவா் ஹிந்துக்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தாலும் அதை ஏற்க முடியாது என்பதால், அவா் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், பொன்முடியை அமைச்சா் பதவியில் இருந்து முதல்வா் நீக்க வேண்டும் என்றாா்.