உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
சிஎஸ்கேவில் இணையும் குட்டி ஏபிடி வில்லியர்ஸ்? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு சிஎஸ்கே ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ’குட்டி ஏபிடி’ என்றழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸ் முன்னாள் தெ.ஆ. வீரரைப் போன்று அதிரடியாக 360 டிகிரியிலும் பேட்டிங் செய்கிறார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் எந்த ஒரு அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. 21 வயதாகும் இவர் இதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மஞ்சள் நிற புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.
இதனால், இவர் சிஎஸ்கேவில் இணைகிறாரா எனக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு நீண்ட நாள்களாக தொடக்க வீரர்களும் மிடில் ஆர்டர் பேட்டர்களும் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
ஒருவேளை டெவால்ட் ப்ரீவிஸ் அணியில் தேர்வானால் சிஎஸ்கே அணிக்கு சிறந்த மிடில் ஆர்டர் ஒருவர் கிடைத்த மாதிரிதான் எனக் கூறிவருகிறார்கள்.
10 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள டெவால்ட் ப்ரீவிஸ் 230 ரன்களை 133.72 ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.