செய்திகள் :

சிதம்பரம் கோதண்ட ராமர் கோயில் தேரோட்டம்!

post image

சிதம்பரம் மேல ரதவீதியில் உள்ள கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

சிதம்பரம் மேல வீதியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த மார்ச் 28-ம் தேதி திருமஞ்சனத்துடன் தொடங்கியது. அதன்படி, மார்ச் 29-ம் தேதி கொடி யேற்றம் நடைபெற்றது.

தினமும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீகோதண்டராமர் வீதிஉலா நடை பெற்றது. இதைத் தொடர்ந்து, கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது.

மேல ரதவீதி கோயில் வளாகத்திலிருந்து புறப்பட்ட தேரானது நான்கு வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை இழுத்து வழிபட்டனர்.

தினமும் காலை திருமஞ்சனம் நிகழ்ச்சியும், மாலை சீதா கல்யாணமும் நடைபெற்றது. ஏப். 7-ஆம் தேதி திங்கள்கிழமை காலை புஷ்பயாகமும், மாலை ஸ்ரீஆஞ்சநேயர் உற்சவம், பட்டாபிஷேகம், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஏப்.8-ம் தேதி செவ்வாய்க்கிழமை சதகலச திருமஞ்சனம் நிகழ்ச்சியும், ஏப். 9-ம் தேதி விடாயாத்தி திருமஞ்சனமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமே நடைபெற்ற கோதண்டராமர் கோயில் தேரோட்டம்

இதையும் படிக்க | சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? அரிய வாய்ப்பு!

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வரும் ஏப். 12 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்அறிவிக்கப்பட்டுள்ளது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமி... மேலும் பார்க்க

கோவை வந்தார் ராஜ்நாத் சிங்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படைத் தளத்திற்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய இணை... மேலும் பார்க்க

நீட் விலக்கு: சட்டப் போராட்டம் தொடரும் - மு.க. ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு விளக்கு அளிக்கக் கோரும் சட்டப் போராட்டம் தொய்வின்றி தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வ... மேலும் பார்க்க

தென்னை நார் பொருள்களுக்கு தனித்துவமான வணிகக் குறியீடு: அமைச்சர்

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தென்னை நார் பொருட்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தையில் அங்கீகாரம் பெற ஒரு தனித்துவமான வணிகக் குறியீடு (branding) உருவாக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத... மேலும் பார்க்க

காட்பாடி - திருப்பதி இடையே மேலும் ஒரு ரயில் பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் வழிப்பாதைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின்படி, ரூ. 1,332 கோடி... மேலும் பார்க்க