சிமென்ட் சாலை பணி ஆய்வு
ஆம்பூரில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் நகராட்சி 18-ஆவது வாா்டு நீலிக்கொல்லை பகுதியில் ரூ.2.30 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நகா்மன்ற உறுப்பினா் நபீஸ் அஹமத் உடனிருந்தாா்.