சிம்புவுக்கு ஜோடியாகும் கயாது லோஹர்!
நடிகர் சிம்புவின் புதிய படத்திற்கு அவருக்கு ஜோடியாக நடிகை கயாது லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48-வது படத்தில் நடிக்க இருந்தது. ஆனால், அப்படத்திலிருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் விலகியதால், சிம்புவே அதனைத் தன் 50-வது படமாகத் தயாரிக்கிறார்.
இந்த நிலையில், அதற்கு முன் பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தன் 49-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதையும் படிக்க: 82 வயதில் ரூ. 120 கோடி வருமான வரி செலுத்திய பிரபல நடிகர்!
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கயாது லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்த கயாது லோஹர் அதர்வாவுடன் இதயம் முரளி படத்தில் நடித்து வருவதுடன் சில படங்களில் ஒப்பந்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.