சிறந்த நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சாய் பல்லவி! சர்வதேச திரைப்பட விழா விருது பட்டியல்!
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டது.
சென்னை சர்வதேச திரைப்பட விழா 2024, டிசம்பர் 12 முதல் 19 வரை நடைபெற்றது. தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் நடத்தும் இந்த விழாவில் 180 படங்கள் திரையிடப்பட்டன.
விழாவின் இறுதியில் சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை பிரிவில் வெள்ளிக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த படம்: அமரன் - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும், தயாரிப்பாளர் மகேந்திரனுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
சிறந்த படம்(இரண்டாம் இடம்): லப்பர் பந்து - இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் லக்ஷ்மணன் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
சிறந்த நடிகர்: மகாராஜா திரைப்படத்துக்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு விருதுடன் ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
சிறந்த நடிகை: அமரன் திரைப்படத்துக்காக நடிகை சாய் பல்லவிக்கு விருதுடன் ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இதையும் படிக்க : சகுனி பட இயக்குநர் காலமானார்
சிறந்த துணை நடிகர்: தினேஷ்(லப்பர் பந்து)
சிறந்த துணை நடிகை: துஷரா விஜயன்(வேட்டையன்)
சிறந்த இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்(அமரன்)
மக்களுக்கு பிடித்த நடிகர்: அரவிந்த் சாமி(மெய்யழகன்)
மக்களுக்கு பிடித்த நடிகை: அன்னா பென்(கொட்டுக்காளி)
சிறந்த பொழுதுபோக்குப் படம்: வேட்டையன்
சிறந்த கதை: நித்திலன் சாமிநாதன்(மகாராஜா)