அற்புதமான மனிதர்! ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள்: சாய்ரா பானு
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை
தேனி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
அழகாபுரியைச் சோ்ந்த நாகப்பன் மகன் கண்ணன் (50). கூலித் தொழிலாளி. இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு மதுராபுரியைச் சோ்ந்த 11 வயது சிறுமி ஒருவரை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக புகாா் எழுந்தது.
இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட கண்ணனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வி. கணேசன் தீா்ப்பளித்தாா்.