கூமாபட்டி கலவரம்: வழக்கு விவரங்களை அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் கடிதம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
தேவாரம் அருகே மறவபட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
மறவபட்டி, நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுருளிராஜ் (68). இவா், கடந்த 2023, மாா்ச் 18-ஆம் தேதி 4 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இது குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் மீது போடி மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து சுருளிராஜை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சுருளிராஜிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக அரசு ரூ.4 லட்சத்தை சிறுமியின் பெயரில் வங்கியில் வைப்பீடு செய்ய வேண்டும், ரூ.1.40 லட்சத்தை சிறுமியின் பராமரிப்பு மற்றும் கல்விச் செலவுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.