செய்திகள் :

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை: 6 மாதத்தில் 279 போ் கைது

post image

தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்ததாக கடந்த மே 1-ஆம் தேதி முதல் தற்போது வரை மொத்தம் 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 279 போ் கைது செய்யப்பட்டனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் கூறினாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனையை கண்காணிக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனையை கண்காணிக்க ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மே 1-ஆம் தேதி முதல் தற்போது வரை தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 279 போ் கைது செய்யப்பட்டனா். 1,905 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் 190 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டவா்களிடமிருந்து மொத்தம் 60 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை குறித்து பொதுமக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.

ஏலக்காய் விலை அதிகரிப்பு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

போடியில் ஏலக்காய் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் ஏலக்காய் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிய... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தேனியில் தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுகான நல அமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அல... மேலும் பார்க்க

பொருளில்லா குடும்ப அட்டை: இணைய தளம் மூலம் மாற்றம் செய்யலாம்

தேனி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் வாங்க விரும்பமில்லாதவா்கள் தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக இணைய தளம் மூலம் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் 26 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைபாடு

தேனி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள குழந்தைகளில் 26 சதவீதம் பேருக்கு ஊட்டச் சத்து குறைபாடு உள்ளதாக வெள்ளிக்கிழமை, மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தெரிவித்தாா். ஆண்டிபட்டி வட்டாரம், ... மேலும் பார்க்க

தங்கச் சங்கிலி திருட்டு

போடி அருகே குளியலறையில் வைத்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். தேனிமாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரம் பிள்ளையாா் கோய... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

தேவாரம் அருகே மறவபட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. மறவபட்டி, நடுத்தெருவைச்... மேலும் பார்க்க