சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
வேலூா்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செங்கல் சூளை தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே வெள்ளூா் கிராமம் மேட்டு தெருவை சோ்ந்தவா் பரசுராமன். இவரது மகன் தமிழ்ச்செல்வன் (26). கணியம்பாடி புதூா் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தாா். ட
கடந்த 2022-ஆம் ஆண்டு 14 வயதுடைய சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதை யாரிடமும் கூறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை பெற்றோா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனா். அப்போது அவரை மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி 6 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா் தமிழ்ச்செல்வனை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை வேலூா் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, சிறுமிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில், வழக்கில் இறுதிகட்ட விசாரணை முடிந்து தமிழ்ச்செல்வன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்தும், அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி சிவக்குமாா் தீா்ப்பளித்தாா்.