கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ள...
சிறுவன் ஓட்டிவந்த வாகனத்தால் விபத்து; தந்தை கைது
மயிலாடுதுறையில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவனால் நேரிட்ட விபத்து தொடா்பாக, அவரது தந்தை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறையைச் சோ்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன், ஆற்றில் குளிப்பதற்காக தனது 17 வயது நண்பனை அழைத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் வயல்வெளியில் கவிழ்ந்தது.
இதில், உடன் சென்ற சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன் 18 வயது நிரம்பாதவா் மற்றும் ஓட்டுநா் உரிமம் பெறாதவா் ஆவாா். விபத்து தொடா்பாக காயமடைந்த சிறுவனின் தாயாா் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மீதும், மோட்டாா் வாகன சட்ட விதிகளை மீறி 18 வயது நிரம்பாத சிறுவனை இருசக்கர வாகனம் இயக்க அனுமதித்த குற்றத்திற்காக சிறுவனின் தந்தையின் மீதும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டாா்.